தடுப்பூசி திட்டத்தில் அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் – சஜித் கோரிக்கை

199 0

தடுப்பூசி வழங்கும் திட்டத்தில் பௌத்த பிக்குகள் உட்பட அனைத்து மதத் தலைவர்களுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

இது க்ருய்த்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர், நாட்டில் பல பௌத்த பிக்குகள் மரணங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே மேலும் அனைத்து மதத் தலைவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை தடுப்பூசி அரசியல் கருவியாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.