தமிழகத்தில் 3.8 கோடி பாட புத்தகங்கள் தயார்- ஊரடங்கு தளர்வுக்கு பிறகு வினியோகம்

216 0

பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 வகுப்புகளுக்கான 2-வது தொகுதி பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் கொரோனா காலத்திலும் அரசு பாடநூல் நிறுவனம் மாணவர்களுக்கு தேவையான பாடப் புத்தகங்களை அச்சிட்டுள்ளது.

இதுவரை 3.8 கோடி பாடப் புத்தகங்கள் தயாராகி உள்ளன. சுமார் 91 சதவீதம் புத்தகங்கள் பிரிண்டர்களிடம் இருந்து குடோன் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
பள்ளி மாணவிகள்

8-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு 100 சதவீத புத்தகங்கள் அச்சிடப்பட்டுவிட்டன. ஊரடங்கு காரணமாக ஒன்று மற்றும் 2-ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சிடுவதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கு தளர்வு அறிவிக்கப் பணிகள் தொடங்கிவிடும். கடந்த ஜனவரி மாதம் அச்சிடும் பணிகள் தொடங்கப்பட்டன. பெரிய அளவிலான திருத்தங்கள் எதுவும் இல்லாததால் அச்சிடும் வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் குடோன்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

பிளஸ்-1 மற்றும் பிளஸ் -2 வகுப்புகளுக்கான 2-வது தொகுதி பாட புத்தகங்கள் அச்சிடும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கொரோனா பாதிப்பு குறைந்ததும் பாடப் புத்தகங்கள் வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.