கொரோனா பரவலால் தடுப்பூசி ‘வழங்கல்’ பாதிப்பு

392 0

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் வேகமாக அதிகரித்ததால், சர்வதேச அளவில் தடுப்பூசிகள் சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது’ என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு, ‘யூனிசெப்’ எனப்படும் ஐ.நா., சர்வதேச குழந்தைகள் நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தடுப்பூசி போடும் திட்டத்தில் முன்னேற்றம் அடைந்துள்ள நாடுகளில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ளது. அந்த நாடுகளில் விரைவில் இயல்பு வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

எனினும் சர்வதேச அளவில் தொற்று பரவல் நிலை கவலையளிக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள், 200 கோடி, ‘டோஸ்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட வேண்டும் என, எதிர்பார்த்தோம். ஆனால் தெற்காசியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது, தடுப்பூசி சப்ளையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

தடுப்பூசி தயாரிப்பில் சர்வதேச மையமாக திகழும் இந்தியாவில், வைரஸ் பரவலால் தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது . இதனால் சர்வதேச அளவில் தடுப்பூசிகள் சப்ளையில் அடுத்த மாத இறுதிக்குள் கடும் பற்றாக்குறை ஏற்படும் என, தெரிகிறது.இதனால் தடுப்பூசி தயாரிப்பை அதிகரித்து, இந்த பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும். இல்லாவிடில் நிலைமை மேலும் மோசமாகிவிடும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.