கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்: கமல்

351 0

சிறு, குறு நடுத்தர தொழில்களை காக்க, விரைவான நடவடிக்கையை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்’ என, கமல் கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை:தமிழகத்தில் தொழில் துறையை பாதுகாக்க, மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். சோப், கிருமி நாசினி தயாரிப்பில் ஈடுபடுவோரை, அத்தியாவசிய பொருள் தயாரிப்பவர்களாக அங்கீகரிக்க வேண்டும்.மத்திய, மாநில அரசிடம் இருந்து உதவி கிடைக்காவிட்டால், தொழில் நிறுவனங்களை மூடும் நிலை ஏற்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில்களை காக்க, விரைவான நடவடிக்கையை, அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், கொரோனா உடன் பசி, பட்டினி கொடுமையும் இணைந்து விடும்.இவ்வாறு, கமல் கூறியுள்ளார்.