யாழில் 62 பேர் உட்பட வடக்கில் 77 பேருக்கு கொரோனா தொற்று : மருத்துவர் ஆ. கேதீஸ்வரன்

263 0

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேர் உட்பட வடக்கு மாகாணத்தில் 77 பேர் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணபபட்டனர் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடங்களில் ஆயிரத்து 272 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்படி, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 62 பேரும், கிளிநொச்சியில் 6 பேரும்,வவுனியாவில் 6 பேரும், முல்லைத்தீவில் 2 பேரும், மன்னார் மாவட்டத்தில் ஒருவருமாக 77 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர்.

யாழ். மாவட்டத்தில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அத்துடன் 71 வயது பெண் ஒருவர் உயிரிழந்தார்.

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மூவருக்கும்,பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒருவருக்கும், கோப்பாய் பிரதேச வைத்தியசாலையில் மூவருக்கும், சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும், மானிப்பாய் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 31 பேருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் சங்கானை, யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலும் நால்வருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கிளிநொச்சியில், கரைச்சி, கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா மூவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.