அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

270 0

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட களுதாவளை கடற்கரையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இன்று (18) காலை கடற்கரைக்குச் சென்ற மீனவர்கள், சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்ததையடுத்து களுவாஞ்சிகுடி காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் குறித்த சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எனினும் குறித்த சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை எனவும், இதுதொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.