அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளம் தொடர்பான அறிவிப்பு!

291 0

அரச உத்தியோகத்தர்களுக்கான இம்மாத சம்பளத்தை உரிய தினத்துக்கு முன்னதாக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அரச உத்தியோகத்தர்களுக்கா சம்பளம் எதிர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் கொரோனா பரவல் நிலைமையால் விதிக்கப்படும் பயணக்கட்டுப்பாடு மற்றும் ஏப்ரல் மாதத்துக்கான சம்பளம் சிங்கள – தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக வழங்கப்பட்டமை ஆகிய காரணங்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்தார்.