நாளை 16 மணி நேர நீர்வெட்டு

245 0

நாட்டின் சில பகுதிகளில் நாளை (19) காலை 8.30 மணி முதல் 16 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக  தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய பேலியகொட, வத்தளை – மாபோல,  ஜா- எல நகர், கட்டுநாயக்க, சீதுவ, களனி, வத்தளை , பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளது.