ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் ஆசிய பெண்

285 0

ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்திய வம்சாவளிப் பெண்ணான அரோரா அகங்க்ஷா போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்,தற்போது ஐ.நா-வின் பொதுச்செயலாளராக இருக்கும் அன்டோனியோ குட்டெர்ஸ், அரோராவுக்கு எதிராக மீண்டும் போட்டியிடுகின்றார்.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்த அரோரா 6 வயதில் தன் அம்மாவின் வேலை காரணமாக சவுதி சென்றுள்ளார். பின் இந்தியா திரும்பி பள்ளிப் படிப்பை இங்கு முடித்தவர், பின்னர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து கனடாவில் வேலை செய்துவந்தவர் 2016-ம் ஆண்டு முதல் ஐ.நா-வில் பணிபுரிகின்றார். பல நாடுகளில் வாழ்ந்துள்ள அரோரா தன்னையும் ஓர் அகதியாகவே கருதுகிறார்.அகதிகளுக்கான சேவையை ஐ.நா சரிவர செய்யவில்லை எனக் கூறும் அரோரா, தான் வெற்றிபெற்றால் அகதிகளின் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கியதாகவும்,அந்த விபத்தில் தான் உயிரிழந்திருந்தால் தன் வாழ்க்கை ஏதும் அற்றதாய் இருந்திருக்கும் என உணர்ந்தமையினால், தான் வாழந்ததற்காக உலகில் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவெடுத்ததாகவும் அரோரா அகங்க்ஷா கூறியுள்ளார்.

மேலும், ஐ.நா-வின் செயல்பாடுகள் மோசமானதாக உள்ளதாக விமர்சித்த அரோரா, ஐ.நா-வின் வருமானம் 56 பில்லியன் டாலர்கள் எனில், ஒரு டாலரில் 29 சென்ட் மட்டுமே சரியான முறையில் பயன்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

Gallery Gallery