இஸ்ரேலின் முக்கிய நகரில் அவசரநிலை பிரகடனம் – பிரதமர் நேதன்யாகு அறிவிப்பு

281 0

காசா மற்றும் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலின் லோட் நகரில் வசிக்கும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது.

இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது  நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது.

காசா மற்றும் ஜெருசலேமில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து இஸ்ரேலின் லோட் நகரில் வசிக்கும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.