தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் தொற்று ஏற்படகூடிய வாய்ப்பு!

332 0

இலங்கையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்படகூடிய வாய்ப்புகள் உள்ளதாக தொற்றுநோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற விசேட ஊடகசந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக அவர்கள் முறையான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமாகுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாட்டில் தற்போது நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டில் தற்போது கொரோனா தொற்றின் பரவல் நிலைமையானது எந்த அளவில் காணப்படுகின்றது என்பதை எதிர்வரும் நாட்களில் அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனை அடிப்படையாக கொண்டு தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பது மற்றும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்வது என்பன குறித்து தீர்மானம் ஒன்றுக்கு வரமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு பக்கத்தில் தொற்று பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தொற்று நோய் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.