நேற்று பதிவான கொரோனா மரணங்கள் குறித்த முழு விபரம்

207 0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 709 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று பதிவான கொரோனா மரணங்கள தொடர்பான முழு விபரம கீழே…

01.திவுலப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 44 வயதுடைய பெண் ஒருவர், கேகாலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 01 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றால் ஏற்பட்ட தீவிர நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02.ஜாஎல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 70 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 03 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா மற்றும் உயர் குருதியழுத்த நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள ;ளது.

03.மாவில்மட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 42 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் இருந்து கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். இதய நோய், தீவிர கொவிட் நியூமோனியா மற்றும் மோசமாக சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04.நீர்கொழும்பு பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், கிளிநொச்சி கிருஸ்ணபுரம் சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த மருத்துவமனையில் 2021 மே 01 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். தீவிர கொவிட் நியூமோனியா மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05.மாலபே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமாக சிறுநீரகம் செயலிழந்தமை, கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், இதயநோய் மற்றும் நாட்பட்ட நுரையீரல் அழற்சி நிலைமையே மரணத்திற்கான காரணங்காளாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

06.மாலபே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய பெண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 03 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07.பொரல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 02 ஆம் திகதியன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். மோசமான சுவாசக் கோளாறு, கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு மற்றும் குருதியில் கொலஸ்ரோல் அதிகரித்தமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08.நுவரெலியா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 01 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். மோசமான சுவாசக் கோளாறு, கொவிட் நியூமோனியா, இதய நோய் மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள ;ளது.

09.முகத்துவாரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய பெண் ஒருவர், 2021 ஏப்ரல் 30 ஆம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10.நிட்டம்புவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 68 வயதுடைய ஆண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 03 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11.பாணந்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 02 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் மோசமான சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது

12.புலத்சிங்கள பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய பெண் ஒருவர், ஹொரன சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13.கம்பஹா பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 03 ஆம் திகதியன ;று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.