லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள உலகிலேயே மிகஉயரமான போர்க்களமான சியாச்சினில் இந்திய ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள உலகிலேயே மிகஉயரமான போர்க்களமான சியாச்சினில் இந்திய ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள். அங்கு அடிக்கடி பனிச்சரிவு ஏற்படுவதும், அதில் சிக்கி இந்திய வீரர்கள் பலியாவதும் தொடர்கதையாகி வருகிறது.
இதேபோல் தற்போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். ராணுவ வீரர்களான அமர்தீப் சிங் மற்றும் பரப்ஜித் சிங் ஆகியோர்தான் இந்த பனிச்சரிவில் சிக்கி மரணம் அடைந்துள்ளதாகவும், அவர்களின் மறைவுக்கு வீரவணக்கம் செலுத்துவதாகவும் வடக்கு மண்டல கமாண்டர் ஒய்.கே.ஜோசி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த 25-ந்தேதி நடந்த பனிச்சரிவில் சிக்கி 2 வீரர்கள் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

