ஒரே நாளில் 905 பேர் கைது

285 0

18 மணித்தியாலங்களில் நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 3,871 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ்மா அதிபரின் உத்தரவிற்கமைய கடந்த 18 ஆம் திகதி மதியம் 12 மணி தொடக்கம் 18 மணித்தியலாயங்கள் வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளபபட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் 905 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்துள்ளார்

ஏனைய போக்குவரத்து குற்றங்களுக்கள் தொடர்பில் 6,898 வழக்குகளும் தொடரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.