தியாகி அன்னை பூபதி அம்மாவின் 33 வது நினைவு நாள் நினைவஞ்சலி நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் அனுஷ்டிப்பு!

429 0

தியாகி அன்னை பூபதி அம்மாவின் 33 வது நினைவு நாள் நினைவஞ்சலி நிகழ்வு இன்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

தமிழ் மக்களின் விடுதலைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகி அன்னை பூபதி அம்மாவின் 33வது நினைவுதினம் தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகர் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.