கொழும்பு துறைமுக நகரம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை நாளை……………

238 0

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்ட வரைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நாளை மீண்டும் தொடரவுள்ளது.

குறித்த சட்ட வரைப்பிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 19 மனுக்கள் மீதான விசாரணை பிரதம நீதியரசர் ஜெயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றன.

மாற்று கொள்கைக்கான மத்திய நிலையம், ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி. மற்றும் சிவில் சமூக குழுக்கள் உட்பட பல தரப்பினரால் 19 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறித்த ஆணைக்குழுவை நிறுவுவது மூலம் நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறையாண்மையையும் சவால் செய்வதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலமாகவும், பொது வாக்கெடுப்பு மூலமாகவும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.