பொதுமக்கள் தொடர்ந்து கும்பலாக நின்று நதியில் நீராடியதால், அவர்களை ஒழுங்குபடுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரின் கங்கை நதிக்கரையில் கடந்த 1ம் தேதி முதல் கும்ப மேளா திருவிழா நடைபெற்று வருகிறது. 30-ம் தேதி வரை கும்ப மேளா நடைபெற உள்ளது. ஏப்ரல் 12, 14 மற்றும் 27 ஆகிய தேதிகள் புனித நீராடலுக்கு முக்கிய நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள், துறவிகள் மற்றும் அகோரிகள் புனித நீராடுகின்றனர்.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கும்ப மேளாவில் பங்கேற்க வருபவர்கள் கொரோனா பாதிப்பு இல்லை என்ற சான்றிதழை கட்டாயம் காண்பிக்க வேண்டும், அந்த சான்றிதழ் 72 மணி நேரத்துக்குள் வழங்கப்பட்டதாக இருக்க வேண்டும், கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கும்ப மேளாவிற்கு வரும் பொதுமக்கள் முக கவசங்கள் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொடர்ந்து அலட்சியாக உள்ளனா.


