அபுதாபியில் அபூர்வமாக தென்பட்ட ‘ஆள்காட்டி பறவைகள்’

299 0

அபுதாபியில் மிக அபூர்வமான ஆள்காட்டி பறவைகள் தென்பட்டுள்ளது. இந்த பறவைகள் நடமாடும் காட்சிகள் அபுதாபி- துபாய் எல்லைப்பகுதியில் உள்ள விவசாய பண்ணையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருப்பு நிறத்தில் மூக்குடைய கரையோரம் வாழும் பறவையினம் ‘லேப்விங்ஸ்’ எனப்படும் ஆள்காட்டி பறவையாகும். மனிதர்களையோ அல்லது மற்ற எதிரி விலங்கினங்களையோ கண்டால் ஒலிஎழுப்பி மற்ற பறவைகளுக்கும் தெரியப்படுத்தும். இதன் காரணமாக இந்த பறவை ஆள்காட்டி குருவி என்று அழைக்கப்படுகிறது. இப்பறவை தரையில் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் என்பது விந்தையான தகவலாகும்.
பெரிய பறவைகள் அதிகபட்சமாக 35 செ.மீ. நீளம் வரை இருக்கும். ஆண் மற்றும் பெண் பறவைகள் ஒன்று போலவே இருக்கும். ஆனால் ஆண் பறவையின் இறக்கைகள் கொஞ்சம் நீண்டும், கால் மணிக்கட்டு சற்றே வெளியில் நீட்டியவாறும் இருக்கும்.