இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 600 ஐ தாண்டியுள்ளது.
இறுதியாக 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 602 ஆக அதிகரித்துள்ளது என அரசாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

