லெப். கேணல் நீலன்

683 0

மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வுத்துறை துணைப் பொறுப்பாளர் மாவீரர் லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்களின் நினைவு நாள் இன்று ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் கறுப்பு பக்கங்களில் முதல் பக்கமாக பெயர் கூட குறிப்பிட முடியாத துரோகங்கள் சில நிறைந்துள்ளன.

இந்த துரோகக் கும்பலின் சதியில் சிக்குண்டு கடந்த 12.4.2004 அன்று படுகொலை செய்யப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் ஆவார்.

சீனித்தம்பி சோமநாதன் எனும் இயற்பெயரையும் மட்டக்களப்பு ஆரையம்பதியை சொந்த இடமாகவும் கொண்டவர்.

தமிழ் தேசியத்தின் பால் அவர் கொண்டிருந்த ஈர்ப்பும் தலமையின் மேல் அவர் கொண்டிருந்த அழியாததும் அசைக்க முடியாததுமான விசுவாசம் அவர் மட்டக்களப்பில் வீரச்சாவடைந்தபோதும் விசுவமடு மாவீரர் துயிலும் இல்லத்தில் அவரது வித்துடலை விதைக்க வைத்தது.

இன்றைய நாள் லெப்டினனட் கேணல் நீலன் அவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து வீரவணக்கத்தை செலுத்தும் ஒரு நாள் ஆகும்.

தமிழீழ தேசியத்தையும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் நேசிக்கின்ற அனைவரும் இன்றை நாளில் நீலன் அவர்களுக்கு வணக்கத்தை செலுத்துகின்றோம்.

விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழினத்திற்கும் அவமானத்தை தேடித்தந்த மாபெரும் அழுக்காக, மறையாத கறையாக, களையாக, இருந்து வரும் சிலர் தங்கள் வரலாற்று தவறுகளையும் தங்களின் குற்றங்களையும் கழுவ மாவீரர்களின் குருதியை பாவித்தமை என்றும் அழியாத சுவடு ஆகும்.

அவ்வாறான ஆயுதத்தின் வெந்தணலில் அகப்பட்டவர் லெப்டினன்ட் கேணல் நீலன் அவர்கள். அவர் மட்டும் அல்லாமல் வேறு பல போராளிகளும் இந்த சுழியில் அகப்பட்டுக் கொண்டார்கள்.

இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய போராளிகளுக்கும் இன்றைய தினத்தில் நாம் வீரவணக்கத்தை செலுத்துகின்றோம்.

இவர்களுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் தமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.

என்றென்றும் மாவீரர்கள் தியாகம் நிலைத்திருக்கும்.
தாயகம் மலரும். கனவு நனவாகும்

நன்றி

” தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் ”