வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

309 0

மாத்தறை பொலிஸ் பிரிவில் உள்ள வல்கம ரயில் நிலையத்திற்கு அருகே வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப் படையின் ரத்கம முகாமிற்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மைக்ரோ 9 mm ரக துப்பாக்கி ஒன்றும் மற்றும் மெகஷின் ஒன்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

46 வயதுடைய கொட்டவில, கம்புருகமுவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.