அங்கவீனமுற்ற – உயிரிழந்த இராணுவத்தின்  மனைவிமாருக்கு கொடுப்பனவு

242 0

அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த இராணுவத்தின்  மனைவிமார் கொடுப்பனவுகளை வழங்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட வேண்டிய அவசியம் கிடையாது எனத் தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர், அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன என்றும் கூறினார்.

அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த இராணுவத்தின்  மனைவிமார் பாதுகாப்பு அமைச்சின் கட்டட வளாகத்தில் அண்மையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் கனவனை இழந்தவர்கள் தமது கனவனுக்கு 55 வயது நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் ஓய்யூதியக் கொடுப்பனவிற்கு பதிலாக சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கையை நிறைவேற்றுவது இலகுவானதல்ல. எனினும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி , சுமார் ஒரு வருட முயற்சியின் பின்னர் அவர்களின் கோரிக்கையை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்துள்ளது.

இதற்கான அமைச்சரவை யோசனையில் பாதுகாப்பு செயலாளராக நான் கையெழுத்திட்டதோடு, அமைச்சராக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ கையெழுத்திட்டுள்ளார் என்றும் அவர் மேலும் கூறினார்.