அம்பாறை செங்காமம் கிராமத்திற்கு கஜேந்திரன் எம்.பி களவிஜயம்!

398 0

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் பிரதேசத்திற்கு உட்பட்ட காஞ்சிரம்குடா மற்றும் பொத்துவில் பிரதேச பிரிவில் செங்காமம் கிராமத்திற்கு நேற்றையதினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் அவர்கள் கள விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட செங்காமம் கிராமத்தின் மக்களை சந்தித்து அவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் சம்மந்தமாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.