புத்தளம், பத்தேகமவில் கொரோனா மரணங்கள் பதிவு!

340 0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 598 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, புத்தளம் பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் பத்தேகம பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.