வவுனியாவில் வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்ட இருவர் கைது

20 0

வவுனியா- திருநாவற்குளத்தில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர், பொலிஸாரினால் இன்று (வியாழக்கிழமை) கைது  செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து தகவலை வழங்குவதற்கு பொதுமக்கள் அச்சம் வெளியிட்டிருந்த நிலையில், நேற்று (புதன்கிழமை) சம்பவம் தொடர்பான  காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனின் கவனத்திற்கு மக்களினால் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து கு.திலீபன், உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதிபொலிஸ்மா அதிபருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையிலேயே சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேலதிக விாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.