அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை வீட்டில் கட்டி போட்டு அடித்து, உதைத்து கும்பல் பொருட்களை திருடி சென்றுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் முன்னாள் மந்திரியாக இருந்தவர் பெர்னார்டு தபை. இவரது மனைவி டாமினிக் தபை. அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரான பெர்னார்டு, பாரீஸ் அருகேயுள்ள காம்ஸ் லா வில்லே பகுதியில் அமைந்த தனது வீட்டில் மனைவியுடன் படுத்து உறங்கியுள்ளார்.
அவரது வீட்டிற்குள் நேற்று அதிகாலை 4 திருடர்கள் புகுந்துள்ளனர். அவர்கள் பெர்னார்டு மற்றும் அவரது மனைவியை அடித்து, உதைத்துள்ளனர். இதில் வலி பொறுக்க முடியாமல் அவர்கள் அலறியுள்ளனர். பின்னர் இருவரையும் கயிற்றால் கட்டி போட்டுள்ளனர்.

