இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தியில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் அதிர்ச்சிதகவல் வெளிவந்துள்ளது.
இலங்கையில் தேங்காய் பற்றாக்குறை குறித்து அகில இலங்கை விவசாய கூட்டமைப்பு ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மரங்களை வெட்டுதல் சட்டத்தில் தென்னை மரங்கள் இன்னும் சேர்க்கப்படவில்லை.
நாட்டில் தேங்காய்களின் தேவையை பூர்த்தி செய்ய ஆண்டுக்கு தேவையான தேங்காய்களின் அளவு 3,700 மில்லியன் ஆகும்.
தற்போது நாட்டில் ஆண்டுக்கான தேங்காய் உற்பத்தி 2,400 முதல் 2,500 மில்லியன் வரை உள்ளது.
இதற்கு அனுமதியின்றி தென்னை மரங்களை வெட்டுவதே முக்கிய காரணம் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

