பகமுண பகுதியில் வெடிப் பொருட்களுடன் சந்தேகநபர்கள் நால்வர் கைது

343 0

நாவுல- எலஹெர வீதிக்கருகில் அமைந்துள்ள பகமுண பகுதியில் வெடிப்பொருட்களுடன் 4 சந்தேகநபர்களை பொலிஸார் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்துள்ளனர்.

மேலும் முச்சக்கர வண்டியொன்றில் இருந்தே  20 கிராம் வெடி மருந்து, 3 கிலோ 230 கிராம் அமோனியா, 14 டெட்டனேட்டர்கள் மற்றும் 135 வோடர் ஜெல் குச்சிகள் ஆகியவற்றினை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அவிசாவலையைச் சேர்ந்தவர்கள் என்பது பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.