தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்

412 0

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய மதுபானங்கள் கடந்த சில தினங்களாக கொண்டு செல்லப்படவில்லை.

தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் நாளை (ஞாயிறு) இரவு 7 மணியுடன் ஓய்கிறது. வாக்குப்பதிவு வருகிற 6-ந்தேதி நடக்கிறது.
நாளை (ஞாயிறு) முதல் 6-ந்தேதி வரை 3 நாட்கள் மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதால் குடோன்களில் இருந்து கடைகளுக்கு கொண்டு செல்ல வேண்டிய மதுபானங்கள் கடந்த சில தினங்களாக கொண்டு செல்லப்படவில்லை.

அதிக அளவில் மதுபானங்களை வாங்கி பதுக்குவதை தடுப்பதற்காக 30 சதவீதத்துக்கு மேல் விற்பனையாகும் கடைகளை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

மூன்று நாட்கள் தொடர்ந்து குடிக்க முடியாது என்பதால் மதுபிரியர்கள் முன்னேற்பாடாக குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு குவார்ட்டர் வீதம் 3 நாட்களுக்கும் மதுபாட்டில்களை வாங்கி ஸ்டாக் வைப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டினார்கள். இதனால் மதுக்கடைகளில் இன்று கூட்டம் அலைமோதியது.