எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ள நேர அட்டவணை

361 0

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பொது மக்களுக்கான போக்குவரத்து வசதிகளை அதிகரிப்பதற்காக விசேட பஸ்கள், ரயில்கள் சேவையில ஈடுபடுத்தப்படவுள்ளன.

இதற்கான நேர அட்டவணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்து அதிகாரசபை, ரயில்வே திணைக்களம், தேசிய போக்குவரத்து ஆணையகம் ஆகியன இணைந்து இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.

பண்டிகைக் காலத்தின் போது, போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட மாட்டாது என்று சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, அதிகமானோர் தங்களது கிராமங்களுக்கு செல்லவுள்ளனர்.

அதேபோல், சுகாதார வழிமுறைகளை பின்பற்றி போக்குவரத்தில் ஈடுபடுவது போக்குவரத்து அமைச்சின் பொறுப்பாகும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.