கோர விபத்தில் 25 மற்றும் 26 வயதுடைய இரண்டு இளைஞர்கள் பலி!

261 0

பன்னிபிடிய, பொல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

இன்று (02) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தலவத்துகொடயில் இருந்து வந்த மோட்டார் வாகனமொன்று பொல்கொடுவ வீதிக்கு திரும்ப முற்பட்ட போது பன்னிப்பிட்டி பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் மற்றைய நபர் கலுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யடியாந்தோட்டை, மல்லகொட பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடைய கசுன் பண்டார மற்றும் மீகொட பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய பிரபோத மதுஷான் என்ற இளைஞர்கள் இருவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.