நீ.மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் மக்கள் அஞ்சலிக்காக கலைத்தூது கலையகத்தில்…..

525 0

கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாக கலைக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்து நேற்றைய தினம் இவ்வுலக வாழ்வில் இருந்து விடைபெற்ற திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் புகழுடல் இன்று காலை முதல் இல.286,பிரதான வீதி,யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது கலையகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.பெருமளமான மக்கள் தொடர்ச்சியாக தமது இறுதி அஞ்சலியை தந்தைக்கு செலுத்திக்கொண்டிருக்கின்றார்கள்.

தந்தை அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் எதிர்வரும் 06.04.2021 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்.தூய மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்ட ஆயர் மேதகு யஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இடம்பெறும்.