யேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் !!!

1237 0

யேர்மனியில் உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்கான தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் !!!

கடந்த சில நாட்களாக அதிக எண்ணிக்கையிலான எமது ஈழத் தமிழ் உறவுகள் சிறிலங்காவுக்கு நாடுகடத்தப்படுவதற்காக அதிரடியாக கைதுசெய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் Duldung விசாவை மட்டுமே வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த இரு நாட்களாக நாம் பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை சேகரித்து வருகின்றோம் . இவ்விடையம் சார்ந்து யேர்மனியில் உள்ள மனிதவுரிமை அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தி உள்ளோம். நாளைய தினம் யேர்மனியில் உள்ள அகதிகளுக்கானமுக்கிய அமைப்புடன் கைதுசெய்யப்பட்டு உள்ள உறவுகளுக்கான அரசியல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றோம். தற்போதைய நாடுகடத்தல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ள உறவுகளை யாரும் அறிந்திருந்தால், தயவுசெய்து அவர்களின் தகவல்களை சுருக்கமாக எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகின்றோம்.

நாடுகடத்தப்படவுள்ள உறவுகளின் உடனடியான விடுதலைக்காக குரல்கொடுக்கும் வகையில் நாம் யேர்மன் ரீதியாக நான்கு இடங்களில் கண்டன போராட்டங்களை முன்னெடுக்க ஒழுங்குசெய்துள்ளோம். மேலதிகமான தகவல்கள் இத்துடன் இணைப்பில் உள்ளது.
Duldung விசாவில் உள்ளவர்கள் உடனடியாக தமது சட்டத்தரணிகளுடனும் , அகதிகளுக்கு உதவும் ஆலோசனை மையங்களுடனும் தொடர்புகொள்ளவும்.
இவ்விடையம் சார்ந்து உதவிகள் தேவை இருப்பின்
பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் , நண்பர்கள் எம்முடன் தொடர்புகொள்ள பின்வரும் தொலைபேசி இலக்கங்களை அழைக்கவும் .

அகிலன் 0157 53587660
விபீசனன் 0176 41313331
சங்கர் 017621751446

தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி
ஈழத்தமிழர் மக்கள் அவை – யேர்மனி
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி
தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி