யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச அரசியல் கைதிகள் தின நிகழ்வுகள்.

615 0

சுதந்திர விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்று போராடியதற்காகவே இன்று சிறைக்கம்பிகளுக்கு பின்பு சுவாசித்துக்கொண்டுடிருக்கும் உறவுகளுக்காக தொடர்ந்தும் போராடுவோம் – யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச அரசியல் கைதிகள் தின நிகழ்வுகள்

சர்வதேச அரசியல் கைதிகள் தினத்தை முன்னிட்டு யேர்மனியின் தலைநகரம் பேர்லினில் மற்றும் ஓவர்கௌசன் (Oberhausen) ஆகிய இரு நகரங்களிலும் நேற்றைய தினம் பல்லின சமூகத்தினரோடு இணைந்து கவனயீர்ப்பு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

உலகத்தில் உள்ள பல நாடுகளில் அரசியல் கைதிகள் பல ஆண்டுகளாக எந்தவொரு விசாரணையும் இன்றி, சித்திரவதை செய்வதன் ஊடாக அவர்களை பொய்யான குற்றச்சாட்டுக்களை ஏற்கவைத்து பல வருடங்களாக சிறையில் வாடுகின்றார்கள் ´.

‘சிறைச்சாலைகளிலுள்ள அரசியல் கைதிகள் மற்றும் போர்க் கைதிகளை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டுமென்பதுடன், காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் குறித்தும் அரசாங்கம் பதில் சொல்லியாக வேண்டும் என கவனயீர்ப்பு நிகழ்வில் உரையாற்றிய அனைத்து சமூகத்தினரும் வலியுறுத்தினார்கள்.அத்தோடு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சமூகப் பிரச்சனைகளையும் பேச்சாளர்கள் கருத்தில் கொண்டு தமது உரையில் குறிப்பிட்டார்கள்.
சிறிலங்கா பேரினவாத அரசின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல்/ போர் கைதிகள் தொடர்பாக தமிழ் பிரதிநிதிகள் தமது உரையை நிகழ்த்தினார்கள்.

சுதந்திர விடுதலையை சுவாசிக்க வேண்டும் என்று போராடியதற்காகவே இன்று சிறைக்கம்பிகளுக்கு பின்பு சுவாசித்துக்கொண்டுடிருக்கும் உறவுகளுக்காக தொடர்ந்தும் போராடுவோம் என இறுதியில் உறுதியெடுக்கப்பட்டது.