மாகாண சபை தேர்தலை நடத்த முன் நாடாளுமன்ற அனுமதியை பெறவேண்டும் – தினேஸ் குணவர்தன

449 0

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் அது தொடர்பில் நாடாளுமன்றத்தின் அனுமதியை பெற வேண்டும் என்று வௌிவிவகார துறை அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகள் குறித்து தற்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துகளை வௌியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்டதிட்டங்களை கடந்த அரசாங்கம் மாற்றியமைத்தது. அது சட்டத்திற்கு புறம்பானது என்று உயர்நீதிமன்றம் தீர்பளித்திருந்தது.

எனவே, சட்டவிதிமுறைகளை மாற்றியமைக்காமல் யாருக்கும் தேர்தலை நடத்த முடியாது. சட்டவிதிமுறைகளை சரியாக மாற்றியமைத்து நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்று அமைச்சர் தினேஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.