இலங்கையில் இதுவரையில் 45 கொரோனா சடலங்கள் அடக்கம் – இராணுவத் தளபதி!

336 0

இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் வைக்கப்பட்டிருந்த 45 கொரோனா சடலங்கள் இதுவரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி  தெரிவித்தார்

இந்த நிலையில், கொரோனா சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பாக காணப்பட்ட பிரச்சினைகள் முழுவதுமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இன்னும் ஓரிரண்டு சடலங்கள் உள்ளதாகவும் அவை விரைவில் அடக்கம் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில், ஓட்டமாவடி பிரதேசத்தில் அடக்கம் செய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.