வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தல் காலம் குறைக்கப்படலாம் – இராணுவ தளபதி

308 0

வெளிநாட்டிலிருந்து திரும்பும் இலங்கையர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை 7 ஆக குறைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கையினை இராணுவ தளபதி சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் விடுத்துள்ளார்.

அத்தோடு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்த அனுமதிக்குமாறும் அவர் கோரியுள்ளார்.

அந்தவகையில் குறித்த இரண்டு கோரிக்கைகளும் எதிர்வரும் நாட்களில் அங்கீகரிக்கப்படும் என நம்புவதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா நம்பிக்கை தெரிவித்தார்.

ஹோட்டல்களில் தனிமைப்படுத்தும் போது வெளிநாட்டில் இருந்துவரும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.