முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னையில் உள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்கிறார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடி தடுப்பூசி போட்டு கொண்டார். மேலும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோரும் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். மேலும் பல்வேறு தலைவர்களும் கொரோனா தடுப்பூசியை போட்டு வருகின்றனர்.
இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை 9.15 மணிக்கு கொரோனா தடுப்பூசி போட்டுகொள்கிறார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

