ஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம்

404 0

indexkkkkkkkkkkkஐம்பது வருடங்களின் பின் கிளிநொச்சியை பெரும்பான்மை இனத்தவர் உரிமை கோரும் அபாயம் இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டாம் திகதி கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நகர அபிவிருத்தி தொடர்பான முகாமைத்துவக் குழுவின் கூட்டத்தில் கிளிநொச்சியில் உள்ள இராணுவ வெற்றிச் சின்னங்கள் அழிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப் பட்டுள்ளது.
இது தொடர்பாகவே வடமாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை இவ்வாறு தெரிவித்தார்
கிளிநொச்சியில் டிப்போ சந்தியில் முன்னர் சந்திரன் பூங்கா இருந்த வளாகத்தில் இராணுவ வெற்றிச் சின்னம் ஒன்று பொறிக்கப்பட்டுள்ளது.
அதை விட அவ்வளாகத்தில் பல வருடங்கள் பழமை வாய்ந்த செங்கற்களாலான சுவர் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்
இதனால் ஐம்பது வருடங்களுக்கு பின்னர் தென்பகுதியில் இருந்து வருகின்ற பெரும்பான்மை இனத்தவர்கள் இவ் சுவர்களை காட்டி இது எமது இனத்தவர் வாழ்ந்த இடங்கள் என உரிமை கோரும் அபாயம் உள்ளதுடன் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களை தினமும் பார்வையிடும் போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் அவர்களது கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நினைவுக்கு கொண்டுவந்து எமது மக்கள் யுத்தத்தின் வலிகளை மறக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் அத்தோடு வளர்ந்து வருகின்ற சிறுவர்கள் இச் சின்னம் ஏன் அமைக்கப் பட்டுள்ளது என கேள்வி எழுப்பும் போது யுத்தத்தின் வலிகள் பரம்பரை பரம்பரையாக கடத்தப் படும் எனவே கிளிநொச்சியில் உள்ள அனைத்து இராணுவ வெற்றிச் சின்னங்களும் அழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்