தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 6-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. அந்தவகையில் இன்று திமுக, மக்கள் நீதி மய்யம், அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரையில் மார்ச் 12 மற்றும் 13 தேதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள இருந்த நிலையில் பிரசாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார். இதனால் மு.க.ஸ்டாலினின் தேர்தல் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

