சென்னையில் இன்று மாலை சீமான் முன்னிலையில் 234 வேட்பாளர்கள் அறிமுகம்

226 0

234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வு செய்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ள வேட்பாளர்களை அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்வு செய்துள்ளார்.

பெண்களுக்கு ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலிலும் சரிசமமாக தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வரும் சீமான், இந்த தேர்தலிலும் 117 பெண் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் 234 வேட்பாளர்களும் இன்று மாலை சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்படுகிறார்கள். அனைத்து வேட்பாளர்களும் ஒரே மேடையில் சீமான் முன்னிலையில் அணிவகுக்கிறார்கள்.

இந்த கூட்டத்தில் சீமான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பேசுகிறார்.