நாங்கள் வைத்தியசாலைகளை திறக்க விரும்பவில்லை – சுகாதார அமைச்சு

313 0

நாங்கள் வைத்திய சாலைகளைத் திறக்க விரும்பவில்லை மூடவே விரும்புகிறோம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய வைத்தியசாலைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஆரோக்கி யமான மக்களை உருவாக்கி வைத்தியசாலைகளை மூடுவதே சுகாதார அமைச்சின் குறிக்கோள் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னி யாராச்சி தெரிவித்தார்.

 

பெருந்தோட்ட அமைச்சு ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அவர் தெரிவித்தார்.

தற்போதைய உணவு காரணமாக மக்கள் பல நோய்களால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், பாரம்பரிய உணவு மற்றும் வாழ்க்கை முறையுடன் பழகுவதற்கான நேரம் இது என்றும் பவித்திரா தெரிவித்துள்ளார்.