கொவிட்-19 தொற்று அபாயமுள்ள ஊடகவியலாளர்கள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடுவதற்கு அவர்களை அடையாளம் காண ஏற்கனவே ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
வெகுஜன ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல சுகாதார அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டதற்கமைய இது இடம்பெறுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி அனைத்து செய்தி வெளியீடுகளும் கொவிட்-19இன் அதிக அபாயமுள்ள பகுதிகளில் தொழில் புரியும் ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்களைச் சேகரித்து தடுப்பூசி போட வேண்டியவர்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும் என அத்திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
இதன்படி சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரி பூர்த்தி செய்யப்பட்ட ஆவணத்தை அரசாங்க தகவல் திணைக்களத்தில் சமர்ப்பிக்க முன் மேலதிக நடவடிக்கைக்காக அதில் கையெப்பமிட வேண்டுமென தகவல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

