கொரோனா சடலங்களை குப்பியாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி கடிதம்!

314 0

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை குப்பியாவத்தை முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்குமாறு கோரி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்  அசேல குணவர்தனவிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்ததை அனுப்பியுள்ள மருதானை மசூதியின் அறங்காவலர்கள், கிளிநொச்சி – இரணைதீவு பகுதியில் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதாக அரசாங்கம் அறிவித்திருப்பதானது நடைமுறை சாத்தியமல்ல என சுட்டிக்காட்டியுள்ளனர்.

தெமட்டகொட – குப்பியாவத்தை மயானம் கொரோனா சடலங்களை அடக்கம் செய்வதற்கு தகுந்த இடமாகும் என்று பேராதனை பல்கலைக்கழகம் பரிந்துரைத்துள்ளதாக குறித்த கடிதத்தில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குப்பியாவத்தை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டால், அடக்கம் செய்யும்போது சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படும் என்பதையும் அறங்காவலர்கள் அந்தக் கடிதத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர்.