நாடொன்றில் பயங்கரவாத செயல்கள்இடம்பெற்றால் அதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதியே பொறுப்பு

172 0

நாடொன்றில் பயங்கரவாத செயல்கள்இடம்பெற்றால் அதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதியே பொறுப்பு என இராஜாங்க அமைச்சர் டிலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாளை நாட்டில் குண்டுவெடித்தால் ஜனாதிபதியும் பிரதமரும் பாதுகாப்பு செயலாளரும் முப்படைகளின் தளபதியுமே பொறுப்பேற்கவேண்டும் என தெரிவித்துள்ள அவர் இது கசப்பான யதார்த்தம் என குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கும் இது பொருந்தும் ஜனாதிபதி ஆணைக்குழு இதனை தெளிவுபடுத்தவேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வேளை நாட்டின் தலைவராகயிருந்தவரையே பொறுப்பாளியாக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.