வடக்கு மாகாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்ட 451 பேரின் பிசிஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தெல்லிப்பழை வைத்தியசாலை மருத்துவர் ஒருவருக்கு தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் சிகிச்சை வழங்கிய நோயாளி ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் தொற்றுள்ளமை கண்டறிப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனால் மருத்துவரிடம் மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட போது அவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒருவர் பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் மிருசுவில் தொற்றாளர் பங்கேற்ற தேவாலய கூட்டம் ஒன்றில் பங்கேற்றிருந்தார் என்றார்

