குருந்தூர்மலை அடிவார பிள்ளையார் கோவிலை புதுப்பிக்கும் நடவடிக்கை!

330 0

குருந்தூர்மலை அடிவாரத்தில் உள்ள பிள்ளையார் கோவிலை புதுப்பிக்கும் நடவடிக்கையில், அப்பகுதி விவசாயிகள்  ஈடுபட்டுள்ளார்கள்.

குருந்தூர் மலை பகுதி, தற்போது பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தொன்றுதொட்டு வழிபட்டு வந்த குருந்தூர் மலை அடிவாரம், 8ஆம் கண்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீகோணமடு பிள்ளையார் கோவில் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கும் நடவடிக்கையில், அப்பகுதி விவசாயிகள்  ஈடுபட்டுள்ளார்கள்.

இக்கிராம மக்கள் கிராமிய தெய்வங்களை தொன்று தொட்டு வழிபட்டு வந்துள்ளார்கள் என்பதற்கான ஆதாராங்கள் பல காணப்பட்டாலும், கடந்த கால அசாதாரண நிலை காரணமாக அதனை பேணி பாதுகாத்துக்கொள்ள முடியாத நிலையில், தற்போது விவசாயம் செய்துவரும் மக்களாகவே தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலைப்பகுதி காணப்படுகின்றது.

தொல்பொருள் திணைக்களம், வனவளத்திணைக்களம் ஆகியவற்றின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இந்த மக்களின் காணிகள் இன்னும் விடுவிக்கப்பட வேண்டிய நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.