9, 10, 11ம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்- சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு

219 0

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட உள்ளனர்.

தமிழக சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது 110-வது விதியின்கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
பொதுத்தேர்வு இன்றி 9, 10 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டும் இதேபோன்று பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.