பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் பங்கேற்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், சட்டத்தரணி வி. மணிவண்ணன் ஆகியோரிடம் இன்று பிற்பகல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர், மணிவண்ணனிடம் மன்னார் மற்றும் பருத்தித்துறை பொலிஸார் மாநகர சபை முதல்வர் அலுவலகத்துக்குச் சென்று வாக்குமூலம் பெற்றனர்.
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனிடமும் இன்று பிற்பகல் மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்துக்குச் சென்ற ஆறு பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகர முதல்வரும், சட்டத்தரணியுமான வி.மணிவண்ணனிடம் சிங்கள மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்ய பொலிஸார் முயன்ற போதும் அதற்கு மறுப்புத் தெரிவித்த வி. மணிவண்ணன்தான் தெரியாத மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலத்தில் கையொப்பமிடமாட்டேன் என உறுதியாகக் கூறினார். இதனையடுத்து தமிழ் மொழியில் வாக்கு மூலம் பெறப்பட்டது

