தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு

179 0

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு கோரி நாடளாவிய ரீதியிலான ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதுவரை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது தொடர்பில் அரசாங்கம் மற்றும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கு இடையில் சில சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றபோதும் அவை தீர்மானமற்ற நிலையில் முடிவுக்கு வந்தன.

இந்த நிலையிலேயே எதிர்வரும் 5ஆம் திகதி நாடளாவிய ரீதியிலான ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டமொன்றை மேற்கொள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

இதேவேளை தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்துமாறு கோரி தோட்டத் தொழிலாளர்கள், இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்துடன் இணைந்து புளத்சிங்ஹல நகரத்தில் நேற்றைய தினம் எதிர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.